Casting : Lingesh, Monika, Anand Nagu, KPY Anzar, Aksay Kamal, Bommu Lakshmi, Bharani, Vinod Charlas
Directed By : Jay Amar Singh
Music By : Aapro
Produced By : MP Entertainment - Praveen, Sarath and Jana Durairaj
சென்னையில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் உயர் படிப்பு படிக்கும் நாயகன் லிங்கேஷ், வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்து, அதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் ஈடுபடுகிறார். மறுபக்கம், சென்னையில் உள்ள முக்கிய வங்கிகளில் கும்பல் ஒன்று கொள்ளையடிகிறது. அந்த கொள்ளை சம்பவத்தின் போது வங்கியில் சிக்கிக்கொள்ளும் நாயகன் லிங்கேஷ் கொள்ளையனை பார்த்ததாக போலீஸிடம் தெரிவிப்பதோடு சில தகவல்களையும் போலீஸுக்கு சொல்கிறார்.
இதற்கிடையே, மற்றொரு வங்கியில் அதே கும்பல் மீண்டும் கொள்ளையடிக்க, அந்த கும்பலை பிடிக்க தீவிரம் காட்டும் போலீஸ் கொள்ளை கும்பலை நெருங்கும் போது, படத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. அந்த திருப்பும் என்ன? அந்த கொள்ளை கும்பல் யார்? என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘காலேஜ் ரோடு’ படத்தின் கதை.
முதன்மை நாயகனாக லிங்கேஷ் இந்தப்படத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான மேலும் அழுத்தம் கொடுக்கிறது.
நாயகி மோனிகாவின் பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.
லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வருபவரின் கேரக்டரும் அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது. காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையோடே இணைத்துள்ளார் இயக்குநர். காமெடியில் ஒருவர் மட்டும் கவனம் ஈர்க்கிறார்.
யூத்புஃல்லாக ஆரம்பிக்கும் முன்பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். இசை அமைப்பாளர் தன் வேலை கச்சிதமாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஸ்பேக் பகுதியில் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது
எளியவர்களுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்ற கருத்தை தன் முதல் படத்திலே அக்கறையோடு பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர். சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத்தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஆச்சர்யம்.
நல்ல கருத்தை எந்தவித மசாலத்தனமும் இன்றி விறுவிறுப்பாகவும், வேகமாகவும் சொல்வதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘காலேஜ் ரோடு’ கவனம் கவனம் பெறும்.
ரேட்டிங்3.5/5