Casting : Iniko Prabhakara, Shaini, Naren, Vela Ramamoorthy
Directed By : S.Pareeth
Music By : S.N.Arunagiri
Produced By : Fara Sara Films
ஊர் மக்களால் உதாசினப்படுத்தப்படும் இனிகோ பிரபாகரன் தனது நண்பர்களுடன் வெட்டியாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். மறுபுறம், தனது சகோதரர்களிடம் விட்ட சவாலில் ஜெயிப்பதற்காக நரேன், தனது மகனை கஷ்ட்டப்பட்டு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, கவுன்சிலரான வேல ராமமூர்த்தியின் மகள், அவரது கார் டிரைவரை காதலிப்பதுடன், அவருடன் எஸ்கேப் ஆக முயற்சிக்க, வழியில் இனிகோ பிராபகர் டிரைவருடன் சண்டை போடுகிறார். அப்போது அந்த இடத்திற்கு வரும் நரேனின் மகன், அந்த சண்டையை மடக்கி விடுகிறார். விஷயம் வேல ராமமூர்த்தியின் காதுக்கு போக, பள்ளியில் படிக்கும் தனது மகளை காதலிப்பது நரேனின் மகன் தான், என்று தவறாக நினைத்துக் கொள்ளும் வேல ராமமூர்த்தி, நரேனின் மகனை பள்ளியில் இருந்து நீக்கும்படி செய்துவிடுகிறார்.
அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதே, என்று நரேனின் மகன் வருத்தப்பட, அவரை படிக்க வைக்கும் பொருப்பை இனிகோ பிரபாகரன் ஏற்றுக்கொள்கிறார்.
வீடு, வாசல் இல்லாமல், வெட்டியாக ஊர் சுற்றும் இனிகோ பிராபகரனும், அவரது நண்பர்களும் நரேனின் மகனை படிக்க வைத்தார்களா இல்லையா, காதலர்கள் என்னவானார்கள் என்பதே ‘வீரய்யா’ படத்தின் மீதிக்கதை.
ஊரில் சேட்டை செய்துக் கொண்டு வெட்டி ஆபிசராக வலம் வரும் கதாபாத்திரத்தில் இனிகோ பிரபாகரன் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, கதாபாத்திரத்தை உணர்ந்தும் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷைனி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆடுகளம் நரேன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வேல ராமமூர்த்தி, தென்னவன் துரைசாமி, சஞ்சரி விஜய் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். திருநங்கை கதாபாத்திரம் காவனிக்க வைக்கிறது.
சூழ்நிலை காரணமாக மற்றவர்கள் கண்களுக்கு உதாவக்கரைகளாக தெரிபவர்கள் அதே சூழ்நிலையால் அவர்களுக்கு தெய்வமாக கூடும், என்பதை தந்தை - மகன், காதலர்கள், சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மனிதர்கள் என்று மூன்று கதைகளை வைத்து இயக்குநர் எஸ்.பரீத் சொல்லியிருக்கிறார்.
எஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் பி.வி.முருகேசனின் பணியும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக இருப்பதோடு சமூகத்திற்கு சின்ன மெசஜையும் சொல்லியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை அமைப்பு நேர்த்தியாக இருந்தாலும், காட்சிகளின் நீளம் அதிகமாக இருப்பது படத்தில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், ஒரு முறை பார்க்கலாம், என்று சொல்லும் விதத்தில் படம் உள்ளது.