Latest News :

’சொப்பன சுந்தரி’ திரைப்பட விமர்சனம்

536b9f987f0252ec41b0676803a33135.jpg

Casting : Aishwarya Rajesh, Lakshmi Priyaa Chandramouli, Deepa Shankar, Karunakaran, Mime Gopi, Sunil Reddy, Shah ra, Sathish Krishnan, Reddin Kingsley, Bjorn Surrao, Augustine, Nakkalites Dhanam, Aruvi Bala,Manithan Venkat

Directed By : SG Charles

Music By : Music (Songs) - Ajmal Tahseen - Background Score - Vishal Chandrasekhar

Produced By : HUEBOX STUDIOS & HAMSINI ENTERTAINMENT IN ASSOCIATION WITH AHIMSA ENTERTAINMENT - Balaji & Vivek Ravichandran

 

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கூப்பன் மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைக்கிறது. அந்த காரை வைத்து குடும்பத்தின் பொருளாதார பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் குடும்பத்தார் அதே காரின் மூலம் பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள். அது என்ன பிரச்சனை?, அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதே படத்தின் கதை.

 

அழுகாச்சி, அடிதடி என அழுத்தமான வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையின் நாயகியாக படம் முழுவதும் நியாயம் சேர்த்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆட்டம் பாட்டம் என்று கலக்கியிருப்பதோடு, கலர்புல்லாகவும் வலம் வருவது அவரது ரசிகர்களை கூடுதல் குஷிப்படுத்துகிறது.

 

ஐஸ்வர்யா ராஜேஷின் அக்காவாக நடித்திருக்கும் தேசிய விருது நடிகை லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளலி, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்தாலும், முக பாவங்கள் மூலமாகவே தன் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.

 

அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர், வழக்கமான தனது வெள்ளந்தியான வசன உச்சரிப்பின் மூலம் சிரிக்க வைக்கிறார். தனது கணவரின் கிட்னியை விற்று விட்டு, பெண்களிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழிக்க ,அதற்கு அவர்கள் கொடுக்கும் பதிலடிக்கு அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் திரையரங்கையே அதிர வைக்கிறது.

 

கருணாகரன், மைம் கோபி, ஷா ரா, சதிஷ் கிருஷ்ணன், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, நக்கலைட்ஸ் தனம், அருவி பாலா என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் இயல்பாக நடித்திருப்பதோடு, காமெடி காட்சிகளில் இயல்பாக பயணித்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர்கள் பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் பிளாக் காமெடி ஜானர் படங்களுக்கு ஏற்ப வண்ணங்களை பயன்படுத்தி காட்சிகளை பிரமாண்டமாக்கியிருக்கிறார்கள். முதன்மை கதாபாத்திரங்கள் வசிக்கும் பகுதியை படமாக்கிய விதம் மற்றும் அப்பகுதியில் கலர்புல்லான பாடலை காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

இசையமைப்பாளர் அஜ்மல் தஷீனின் பாடல்கள் அனைத்தும் ஆட்டமும், தாளமும் போட வைக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை அளவு.

 

கார் ஒன்றை வைத்துக்கொண்டு முழுமையான காமெடி படத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸின் திரைக்கதை மற்றும் காட்சிகள் வடிவமைப்பில் நாம் ஏற்கனவே பார்த்த படங்களின் சாயல் தெரிவது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

 

இயக்குநரின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் படத்திற்கு பலவீனமாக இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, தீபா சங்கர் ஆகியோரது கதாபாத்திரமும், அதில் அவர்கள் நடித்த விதமும் படத்தின் பலவீனத்தை மறைத்து பலம் சேர்த்திருக்கிறது.

 

மொத்தத்தில், ‘சொப்பன சுந்தரி’ சுமார் ரகம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery