Casting : Guillaume Canet, Gilles Lellouche, Julie Chen, Bun Hay Mean
Directed By : Guillaume Canet
Music By : Matthieu Chedid
Produced By : Les Editions Albert Rene, Les Enfants Terribles, Pathe Films, Les Productions des Tresor
ஆஸ்ட்ரிக்ஸ் & ஒபிலிக்ஸ் (Asterix & Obelix) கதாபாத்திரங்களை மையமாக கொண்ட காமிஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐந்தாவது திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘ஆஸ்ட்ரிக்ஸ் & ஒபிலிக்ஸ் : தி மிடுல் கிங்டாம்’. (Asterix & Obelix: The Middle Kingdom)
காமிக்ஸ் புத்தகங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல் தனிக்கதையை கொண்டு எடுக்கப்பட்டுள்ள நேரடி திரைப்படமான இப்படம், இந்தியா முழுவதும் ஆங்கிலத்தில் வெளியாகியிருப்பதோடு, தென்னிந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டுமே மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷம் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்ட இப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
சீன பேரரசி ஜூலி சென்னை எதிரிகள் சிறை பிடித்துவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் ஜூலி சென்னின் ஒரே மகளான இளவரசி பன் ஹே மீன், ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒபிலிக்ஸ் வாழும் கிராமத்தில் தஞ்சை அடைகிறார். இளவரசியின் கதையை கேட்கும் ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒபிலிக்ஸ் இளவரசிக்கு உதவி செய்ய முடிவு செய்கிறார்கள். அதன்படி, சிறையில் இருக்கும் சீன பேரரசியை காப்பாற்றி, அவர்கள் இழந்த ராட்சியைத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கும் ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒபிலிக்ஸ் சீன இளவரசியுடன் சீனாவுக்கு பயணப்படுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
ஆஸ்ட்ரிக்ஸ் & ஒபிலிக்ஸ் கதாபாத்திரங்களை கொண்ட காமிஸ் கதைகளை அடிப்படையாக கொண்ட அனிமேஷன் படங்களும், திரைப்படங்களும் வெளியாகியிருந்தாலும், காமிக்ஸ் கதையை தவிர்த்துவிட்டு, கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தனிக்கதையாக எழுதி இப்படத்தை இயக்கியுள்ளனர்.
ஆஸ்ட்ரிக்ஸ் & ஒபிலிக்ஸ் இருவரும் செய்யும் சாகசங்கள் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கவில்லை என்றாலும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும், மந்திர தண்ணீரை குடித்துவிட்டு சண்டைப்போடும் போது எதிரிகள் விண்வெளிக்கே சென்று திரும்பும் காட்சிகள் சிறுவர்களை நிச்சயம் பரவசப்படுத்தும்.
ஆஸ்ட்ரிக்ஸ் & ஒபிலிக்ஸ் கதபாத்திரங்கள் யார்?, எப்படிப்பட்டவர்கள், என்பதை அந்த காமிக்ஸ் புத்தகங்கள் படித்தவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும், படிக்காதவர்களுக்கு அவர்களை பற்றி எளிதாக சொல்ல வேண்டும் என்றால், சிறுவர்களுக்கான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோட்டு பட்லூ’ என்ற கார்டூன் தொடரில் வரும் கதாபாத்திரங்களைப் போல் தான் இவர்களும்.
ஆஸ்ட்ரிக்ஸ் & ஒபிலிக்ஸ் கதாபாத்திரங்களின் நகைச்சுவை கலந்த சாகசங்களை சிறுவர்கள் ரசிக்கும் வகையில் சொல்லியிருப்பதோடு, அவர்களின் காதலை பெரியவர்கள் ரசிக்கும்படி சொல்லி முழு படத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.
படத்தை இயக்கியிருப்பதோடு ஆஸ்ட்ரிக்ஸாக நடித்திருக்கும் குய்லூம் கேனட் நகைச்சுவை காட்சிகளில் மட்டும் இன்றி காதல் காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.
ஒபிலிக்ஸாக நடித்திருக்கும் கில்ஸ் லிலூச்சும் தன் கதாபாத்திரத்தை பார்த்தவுடன் சிறுவர்களுக்கு சிரிக்கும்படி நடித்திருக்கிறார். அவருடைய தோற்றத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் அமைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
குழந்தைகளுக்கான படம் என்றாலும் பெரியவர்கள் ரசிக்க கூடிய அரசியல் நையாண்டிகள் படத்தில் நிறைந்திருப்பதால் நிச்சயம் படம் அனைவரையும் ரசிக்க வைக்கும். அதே சமயம், முதல் பாதி சற்று மெதுவாக நகர்வதும், சாகச காட்சிகள் சற்று குறைவாக இருப்பதும் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், இரண்டாம் பாதி திரைப்படத்தில் இளவரசி மீதான காதல், மூங்கில் முகமூடி அணிந்த இளவரசன் யார்? என்ற எதிர்பார்ப்பு, சீசர் படையுடனான போர் போன்றவை இரண்டாம் பாதியை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி சென்று படத்தை ரசிக்க வைக்கிறது.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, விஷுவல் எபெக்ட்ஸ் என அனைத்தும் மிக நேர்த்தியாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கிறது. குறிப்பாக மந்திர தண்ணீரை குடித்துவிட்டி எதிரிகளை அடிக்கும் போது அவர்கள் பறக்கும் காட்சிகள் அனைத்தும் குழந்தைகளை குஷிப்படுத்துகிறது.
ஆஸ்ட்ரிக்ஸாக நடித்திருக்கும் குய்லூம் கேனட் தான் படத்தையும் இயக்கியிருக்கிறார். சிறுவர்களுக்கான படமாக இருந்தாலும், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கும் குய்லூம் கேனட்
ரேட்டிங் 3/5