Latest News :

’கொலை’ திரைப்பட விமர்சனம்

4753388d9360d0aac1adb42093f66ed0.jpg

Casting : Vijay Antony, Ritika Singh, Meenakshii Chaudhary, Radhika Sarathkumar, Siddhartha Shankar, Murli Sharma, John Vijay, Arjun Chidambaram

Directed By : Balaji K. Kumar

Music By : Girishh Gopalakrishnan

Produced By : Infiniti Film Ventures and Lotus Pictures

 

பிரபல மாடல் அழகியான மீனாட்சி செளத்ரி  பூட்டியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த கொலை வழக்கை பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ரித்திகா சிங் விசாரிக்கிறார். ஆனால், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், துப்பறிவாளரான விஜய் ஆண்டனி மீனாட்சி கொலை வழக்கை கையில் எடுக்கிறார். ரித்திகா சிங்கும் மற்றும் விஜய்  ஆண்டனி இணைந்து நடத்தும் விசாரணை பல யூகங்கள் வழியே பயணித்து இறுதியில் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதை வித்தியாசமான முறையிலும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘கொலை’.

 

நான் லைனர் முறையில் கதை சொல்லப்பட்டாலும், கொலை செய்யப்பட்ட மாடல் லைலா என்பவர் யார்? என்பதை கொலை செய்யப்பட்ட அவர் மூலமாகவே சொல்லும் வகையில் காட்சிகளை வடிவமைத்த விதம் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதோடு, முழுப்படமும் ஸ்டைலிஷாக இருக்கிறது.

 

விநாயக் என்ற கதாபாத்திரத்தில் துப்பறிவாளராக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் கெட்டப்பில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். மிக அமைதியான நடவடிக்கை, கூர்மையான பார்வை என்று அவரது ஒவ்வொரு அசைவும் நம் கவனத்தை கட்டிப்போடுவதோடு, ஸ்டைலிஷான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

துடிப்பான இளம் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், விஜயசாந்தி போல் பறந்து பறந்து சண்டை போடவில்லை என்றாலும் தனது அளவான நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்கிறார். 

 

லைலா என்ற மாடல் அழகியாக நடித்திருக்கும் புதுவரவு மீனாட்சி செளத்ரி, சர்வதேச மாடல் அழகிக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருப்பதோடு, தனது நடிப்பிலும் மாடல் அழகியாக அசத்தியிருக்கிறார்.

 

மீனாட்சியின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய், ராதிகா என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களுடைய இயல்பான பாணியை தவிர்த்து நடித்திருப்பது திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், படம் முழுவதையும் ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தியிருக்கிறார். எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று கண்டுபிடிக்க முடியாதபடி காட்சிகளை படமாக்கியிருப்பவர் படத்தில் பயன்படுத்திய வண்ணம், கோணம் என அனைத்தையும் வித்தியாசமாக கையாண்டு பார்வையாளர்களையும் லைலாவுடன் பயணிக்க வைக்கிறார்.

 

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது. காட்சிகளுடன் பார்க்கும் போது மீண்டும் மீண்டும் பார்க்கவும், கேட்கவும் வைக்கிறது. பின்னணி இசை வழக்கமான க்ரைம் சஸ்பென்ஸ் ஜானர் படங்களுக்கானதாக அல்லாமல் புதிய வடிவில் இருக்கிறது.

 

நான் லைனர் வடிவிலான திரைக்கதை மற்றும் புதிய முயற்சியிலான மேக்கிங்காக இருந்தாலும் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே,  அதை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார். குறிப்பாக நடிகர்களின் நடிப்பு மற்றும் விசாரணை முறை ஆகியவை திரைக்கதையின் வேகத்தை குறப்பது போல் இருந்தாலும், அந்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படாத வகையில் காட்சிகளை தொகுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

‘விடியும் முன்’ படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குநர் பாலாஜி குமார், இப்படத்தின் மூலமாகவும் வித்தியாசமான மேக்கிங்கில் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார்.

 

வழக்கமான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதை தான் என்றாலும், அதை சொல்லிய விதத்தில் இயக்குநர் பாலாஜி குமார், பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

கொலை செய்யப்பட்ட லைலா யார்? என்பதை அவர் மூலமாகவே சொல்லும் விதம் மற்றும், அவருடைய கதாபாத்திரம் மூலம் மாடலிங் உலகத்தை காட்டியது, விஜய் ஆண்டனியின் குடும்ப பின்னணி, நடிகர்களின் நடிப்பு, கொலை செய்தது யாராக இருக்கும், என்ற பார்வையாளர்களின் யூகங்களை பொய்யாக்கும் விதத்தில் காட்சிகள் நகர்வது போன்றவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

மொத்தத்தில், க்ரைம் த்ரில்லர் பட விரும்பிகளை முழுமையாக திருப்திப்படுத்தும் இந்த ‘கொலை’ சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery