Latest News :

‘3.6.9’ திரைப்பட விமர்சனம்

14ac0949a12b3507d90b5ee280684af7.jpg

Casting : K.Bhagyaraj, PGS, Black Pandi, Angayar Kannan, Alam Sha, Naresh, Sohail, Rajashree, Sakthivel, Subiksha, Jai, Karthik, Praveen, Rishi, Balu, Shree

Directed By : Shiva Madhav

Music By : Karthik Harsha

Produced By : PGS Productions and Friday Film Factory

 

கிறிஸ்தவ தேவலாயம் ஒன்றில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், துப்பாக்கி ஏந்திய ஒரு குழுவினர் உள்ளே நுழைந்து தேவலாயத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, தேவாலய பாதிரியாரான கே.பாக்யராஜிடம் இருக்கும் ஒரு பொருளை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அது என்ன பொருள்?, அதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற நினைக்கும் பாக்யராஜ் யார்?, என்பதை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வது தான் ‘3.6.9’.

 

கிறிஸ்தவ பாதிரியாராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார். பாதிரியாராக இருக்கும் கே.பாக்யராஜின் மற்றொரு முகமும், அதன் மூலம் அவர் கண்டுபிடித்த அந்த பொருளும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது.

 

கதையின் மற்றொரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் பிஜிஎஸ், ஆர்வம் மிக்க இளைஞராக இருப்பதோடு, தனது அழுத்தமான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

 

பிளாக் பாண்டி, அங்கையர் கண்ணன், அலம் ஷா, நரேஷ், சோஹைல், ராஜஸ்ரீ, சக்திவேல், சுபிக்‌ஷா, ஜெய், கார்த்திக், பிரவீன், ரிஷி, பாலு, ஸ்ரீ என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

முழு படமும் கிறிஸ்தவ தேவலாயத்திற்குள் நடந்தாலும், வித்தியாசமான கோணங்கள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரன் மோகன் குமார், கடுமையாக உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கும் இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா, பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

ஆர்.கே.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு, ஸ்ரீமன் பாலாஜியின் கலை இயக்கம் ஆகியவையும் கதைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

 

மிகப்பெரிய கண்டுபிடிப்பை மையக்கருவாக வைத்துக்கொண்டு அறிவியல் புனைக்கதையை மிக எளிமையாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஷிவ மாதவ், முதல் பாதியில் போடும் மர்ம முடிச்சுகளை இரண்டாம் பாதியில் அவிழ்ப்பது திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு திருப்புமுனைக்கும் பின்னால் உள்ள காரணத்தை விவரிக்கும் போது படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்படுவதோடு, எதிர்ப்பார்க்காத க்ளைமாக்ஸ் காட்சி அசத்தல்.

 

சில குறைகள் இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் இப்படி ஒரு அறிவியல் புனைக்கதையை பல திருப்பங்களோடு சொன்னதோடு, அதை ஒரு சாதனை திரைப்படமாகவும் இயக்கிய ஷிவ மாதவ் மற்றும் படக்குழுவினரின் உழைப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

மொத்தத்தில், புதிய முயற்சியாக வெளியாகியிருக்கும் ’3.6.9’ படத்தை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி பார்த்தால் ஏமாற்றம் இல்லை.

 

ரேட்டிங் 2.8/5

Recent Gallery