Latest News :

’கிரான் டூரிஸ்மோ’ (Gran Turismo) திரைப்பட விமர்சனம்

09d7e2e92ccb7d0b4cf42cda6bde1297.jpg

Casting : David Harbour, Orlando Bloom, Archie Madekwe, Darren Barnet, Geri Halliwell Horner, Djimon Hounsou,

Directed By : Neill Blomkamp

Music By : Lorne Balfe, Andrew Kawczynski

Produced By : Doug Belgrad, Asad Qizilbash,Carter Swan, Dana Brunetti

 

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, கிரான் டூரிஸ்மோ என்ற வீடியோ கேமில் கார் பந்தயம் விளையாடும் இளைஞன் தொழில்முறை கார் பந்தய வீரராக எப்படி உருவெடுக்கிறார் என்பதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்கிறது.

 

எந்த நேரமும் வீடியோ கேமில் கார் பந்தயம் விளையாடிக் கொண்டிருக்கும் நாயகன் ஆர்லாண்டோ ப்ளூமுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி, வீடியோ கேமில் கார் பந்தயம் விளையாடுபவர்களுக்கு இடையே போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. அந்த போட்டியில் வெற்றி பெறும் சிலரை வைத்து தொழில்முறை பந்தய கார் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்படும், அந்த பயிற்சியில் வெற்றி பெறுபவர் நிஸாண் கார் பந்தய அணியின் கார் பந்தய வீரராக தேர்வு செய்யப்பட்டு, தொழில்முறை கார் பந்தயத்தில் போட்டியிடலாம் என்பதே அந்த வாய்ப்பு. 

 

இப்படி ஒரு வாய்ப்பை பயன்படுத்தி, தொழில்முறை கார் பந்தய வீரராக நினைக்கும் நாயகன் ஆர்லாண்டோ ப்ளூம், அதற்காக தன்னை எப்படி தயார்ப்படுத்திக் கொள்கிறார், அவர் நினைத்தது நடந்ததா, அவரை நம்பிய நிஸான் அணி சாதித்ததா, என்ற ரீதியில் நகரும் படம் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.

 

இளம் நாயகனாக நடித்திருக்கும் ஆர்லாண்டோ ப்ளூம், தனது மனதில் இருக்கும் ஆசையை தந்தையிடம் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார். தொழில்முறை கார் பந்தய வீரராக அவர் களத்தில் கார் ஓட்டும் போது, அவர் முகத்தில் இருக்கும் படபடப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 

 

முதன்மை மெக்கானிக்கான டேவிட் ஹார்பர் தன்னால் வெற்றிகரமான கார் பந்தய வீரராக முடியாத நிலையில், ஆர்வம் உள்ள ஆர்லாண்டோ ப்ளூமை கார் பந்தய வீரராக உருவாக்குவதிலும், அதற்காக அவர் மேற்கொள்ளும் முறைகள் மற்றும் எந்த இடத்திலும் கோபமடையாமல் பொறுமையாக கையாளுதல் என்று நாயகனுக்கு நிரகான வேடத்தில் நடித்து கவனம் பெறுகிறார்.

 

விளையாட்டளர் வேடத்தில் நடித்திருக்கும் ஆர்ச்சி மேடெக்வே எந்த நேரமும் கம்ப்யூட்ட முன்பு உட்கார்ந்து கேம் விளையாடும் வெட்டி பசங்க என்று வீட்டில் திட்டு  வாங்கும் இளைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மேற்கொண்ட முயற்சி நிச்சயம் பாராட்ட வேண்டியது. அவருடைய வேடமும், அதில் அவர் நடித்திருக்கும் விதமும் சிறப்பு.

 

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப பணிகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது. குறிப்பாக விஷுவல் எபெக்ட்ஸ் பணி அபாரமாக உள்ளது. கார் பந்தயங்களை படமாக்கிய விதம் மிரட்டல். அதிலும், பந்தயத்தின் போது ஏற்படும் விபத்துக்களை காட்சிப்படுத்திய விதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

ஒரு உண்மை சம்பவத்தை மிக இயல்பாகவும், அதே சமயம் விறுவிறுப்பான திரைக்கதையோடு இயக்கியிருக்கும் இயக்குநர்  நீல் ப்லோம்காம்ப், படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை நம் கவனம் சிதராதப்படி படத்தை நகர்த்தி செல்கிறார்.

 

கார் பந்தய காட்சிகள் மற்றும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையான கார் பந்தயம் பார்ப்பது போலவே இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக வடிவமைத்திருப்பவர், பந்தய கார்களைப் போல் படத்தையும் படு வேகமாக நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ’கிரான் டூரிஸ்மோ’ வீடியோ கேம் விரும்பிகளுக்கான திருப்புமுனையாக மட்டும் இன்றி மிகப்பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery