Latest News :

’லக்கி மேன்’ திரைப்பட விமர்சனம்

d522f9c929b2c87456bb2692dede37c9.jpg

Casting : Yogi Babu, Raichal Rabecca, Veera Bahu, Abdool Lee

Directed By : Balaji Venugopal

Music By : Sean Roldan

Produced By : K. Madhan

 

மனைவி ரேச்சல் ரபேகா, 8 வயதில் மகன் என்று வாழ்ந்து வரும் யோகி பாபு, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக பணியாற்றுகிறார். ஏழ்மையான வாழ்க்கையோடு போராடும் யோகி பாபு, தனது நிலைக்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று நினைக்கிறார். சிறுவயதில் இருந்தே தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நினைத்து வாழும் யோகி பாபுக்கு, குலுக்கல் சீட்டில் கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது. அந்த காரை தனது முதல் அதிர்ஷ்டம் என்று கொண்டாடும் யோகி பாபு, தொழிலில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார ரீதியாகவும் உயர்வடைகிறார்.

 

இதற்கிடையே, யோகி பாபுவின் கார் திடீரென்று காணாமல் போகிறது?, அதன் பிறகு யோகி பாபுவின் வாழ்க்கை என்னவானது?, காணாமல் போன கார் மீண்டும் யோகி பாபுக்கு கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

காமெடி வேடத்தில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து பாராட்டு பெற்று வரும் யோகி பாபு, மிக இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அவ்வபோது தனது வழக்கமான நகைச்சுவை பேச்சால் சிரிக்க வைத்தாலும், எமோஷனால காட்சிகளில் அவரது நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறது. 

 

யோகி பாபுவின் மனைவியாக நடித்திருக்கும் ரேச்சல் ரபேகா,  இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீராவின் நடிப்பு சிறப்பு. அப்துல் லீ வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி.

 

சந்தீப் கே.விஜயின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. மதனின் படத்தொகுப்பு நேர்த்தி.

 

அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு போகாதவர்களுக்கு சிறந்த அறிவுரையாக மட்டும் இன்றி அதை பாடமாக சொல்லாமல் பக்குவமாக சொல்லி அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய நல்ல திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.

 

கதாபாத்திரங்களு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து, அவர்களிடம் சரியான அளவு நடிப்பை வாங்கி, திரைக்கதையை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுப்பார் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘லக்கி மேன்’ நல்ல திரைப்படமாக மட்டும் இன்றி ரசிகர்கள் தங்களோடு தொடர்புப்படுத்திக் கொள்ளும் வாழ்க்கையாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5

Recent Gallery