Casting : Adhesh Bala, Chams, Anu Krishna, Sriram Chandrasekar, Master Darshith, Maris Raja, ArulmaNi, Rehena
Directed By : S.Sugan
Music By : Naresh
Produced By : SR Film Factory - G.Sivaraj
தொழிலதிபர் அருள்மணியை கடத்தி வைத்துக்கொண்டு அவரது மனைவியிடம் ரூ.25 கோடி பணம் பறிக்க முயற்சிக்கும் ஆதேஷ் பாலா, சாம்ஸ் மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர் நாயகி அனு கிருஷ்ணாவையும் கடத்துகிறார்கள். காது கேளாத, வாய் பேச முடியாத 10 வயது சிறுவனான அனு கிருஷ்ணாவின் தம்பி ஆபத்தில் சிக்கியிருக்கும் தனது அக்காவை காப்பாற்ற முயற்சிக்கிறார். சிறுவனின் முயற்சி வெற்றி பெற்றதா?, ஆதேஷ் பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் முயற்சி வெற்றி பெற்றதா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பிதா’ படத்தின் கதை.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா வில்லத்தனமான நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
வில்லனின் கூட்டாளியாக நடித்திருந்தாலும், தனது டைமிங் காமெடி வசனங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனு கிருஷ்ணாவுக்கு சிறிய வேடம் என்றாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
சின்னத்திரை பிரபலம் ரெஹனா முதல் முறையாக வெள்ளித்திரையில் வித்தியாசமான வேடம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.
மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரீஸ் ராஜா, அருள்மணி, சிவன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் ஒளிப்பதிவு, நரேஷின் இசை, ஸ்ரீவர்சனின் படத்தொகுப்பு, கே.பி.நந்துவின் கலை இயக்கம், பாப கென்னடியின் வசனம் என அனைத்தும் அளவாக பயணித்து படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சுகன், எளிமையான கடத்தல் கதையை, எளிமையான திரைக்கதையோடு சொன்னாலும், அதில் எதிர்பார்க்காத சில திருப்பங்களை வைத்து விறுவிறுப்பாக சொன்னதுடன், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
கதை, திரைக்கதை மற்றும் மேக்கிங் ஆகியவை ஒரு பக்கம் இருந்தாலும், இப்படி ஒரு படத்தை 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்திருப்பது வியப்பாக இருக்கிறது. குறிப்பாக பிரமாண்டமான கோவில் திருவிழாவில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கிய விதம், கடத்தல் காட்சிகளும் அதை தொடர்ந்து இடம்பெறும் திருப்பங்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
குறைகள் சில இருந்தாலும், முழு படத்தையும் ஒரே நாளில் படமாக்கிய விதம், படத்தின் தரமும் படத்தை மனமாற பாராட்ட வைக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘பிதா’ படத்தை பார்த்தால் நிச்சயம் பிடிக்கும்.
ரேட்டிங் 2.5/5