Jul 31, 2017 12:54 PM

அறிமுக ஹீரோவுக்கு அருவா வெட்டு - படப்பிடிப்பில் பரபரப்பு

அறிமுக ஹீரோவுக்கு அருவா வெட்டு - படப்பிடிப்பில் பரபரப்பு

’அருவாசண்ட’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நடிகர் ராஜாவுக்கு படப்பிடிப்பில் அருவா வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒயிட் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து வரும் படம் ‘அருவாசண்ட’. ஆதி ராஜன் எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், படத்தின் வில்லன் ஆடுகளம் நரேனின் மருமகன் வேடத்தில் நடிக்கும் சவுந்தரராஜனும், ஹீரோ ராஜாவும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் படமாக்கப்பட்டது.

 

தளபது தினேஷ் வடிவமைத்த இந்த சண்டைக்காட்சியை படமாக்கப்பட்ட போது, எதிர்பாரதா விதமாக சவுந்தரராஜன் வீசிய அரிவாள் ராஜாவின் தாடையில் வெட்டியதில், அவரது பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் படப்பிடிப்பில் பெரும் பதற்றட்டம் ஏற்பட்டது. உடனே ராஜாவுக்கு முதலுதவி செய்யப்பட்டு, பிறகு அருகிலிருந்த மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதனால் சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு பிறகு படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தினால் படப்பிடிப்பில் பெறும் பரபரப்பு ஏற்பட்டதோடு, கோடம்பாக்கத்திலும் நேற்று பதற்றம் ஏற்பட்டது.