Aug 01, 2017 05:58 AM

பண பிரச்சினையில் சிக்கிய ‘சர்வர் சுந்தரம்’ - முடங்கிய சந்தானத்தின் படங்கள்

பண பிரச்சினையில் சிக்கிய ‘சர்வர் சுந்தரம்’ - முடங்கிய சந்தானத்தின் படங்கள்

காமெடி நடிகராக வாரம் ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வந்த சந்தானம், ஹீரோவான பிறகு வருடத்திற்கு ஒரு படம் என்ற ரீதியில் ரசிகர்களிடம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறார். இதற்கிடையே, அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படம் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளதால், சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள பிற படங்களும் முடங்கிப்போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

‘சர்வர் சுந்தரம்’ படத்தை தயாரிக்கும் கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘புருஸ்லீ’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்ததால், அப்படங்களுக்காக வாங்கிய கடனை, சர்வர் சுந்தரம் படத்தின் வியாபாரா உரிமையை வைத்து தயாரிப்பு தரப்பு சரிகட்டிவிட்டதாம். ஆனால், தற்போது அனைத்து கடன் சுமையும் சர்வர் சுந்தரம் தலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளதால், படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்களாம்.

 

இதனால், சந்தானம் ஹீரோவாக நடித்த சக்கப் போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும் போன்ற படங்களும் திசை தெறியாமல் நின்றுவிட்டதாம். தற்போது சர்வர் சுந்தரம் ரிலீச் ஆனால் தான் சந்தானத்தின் பிற படங்களுக்கான வழி பிறக்கும் என்ற நிலையில், ”இப்படி சிக்கிக்கிட்டோமே” என்று சந்தானம் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறாராம்.