Aug 01, 2017 06:01 AM

தமிழ் தயாரிப்பாளர்களுக்கு நோ சொன்ன கேத்தரின் தெரசா!

தமிழ் தயாரிப்பாளர்களுக்கு நோ சொன்ன கேத்தரின் தெரசா!

‘மெட்ராஸ்’ படம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான கேத்தரின் தெரசா, ‘கணிதன்’, ‘கடம்பன்’ என்று தமிழில் தொடர்ந்து நடித்து வந்தாலும் முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் முண்டியடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இதற்கிடையே தெலுங்கில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வந்தவர், இனி அப்படியெல்லாம் நடனம் ஆடப்போவதில்லை என்று அறிவித்தாலும், தெலுங்கு படங்களில் மட்டும் கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வருகிறார்.

 

கோபிசந்த் ஹீரோவாக நடித்துள்ள ‘காதம் நந்தா’ படத்தில் கேத்தரின் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் கேத்தரின் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தை பார்த்த சில தமிழ் தயாரிப்பாளர்கள், தமிழிலும் இப்படி நடிக்கலாமே! என்று கேட்டதற்கு நோ சொல்லிவிட்டாராம்.