விஜய் சேதுபதிக்காக பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கம்

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடைவடைந்து, இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்க உள்ளது. இதற்காக பாண்டிச்சேரியில் பிரம்மாண்ட அரங்குகள் செட் போடப்பட்டு வருகிறது.
ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கும் இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி - திரிஷா முதல் முறையாஜ ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி ஆகியோர் நடிக்க மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பிற்காக பாண்டிச்சேரில் அழகான அதே சமயம் மிக பிரம்மாண்டமான அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் விஜய் சேதுபதி, திரிஷா, காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், 300 துணை நடிகர் நடிகைகள் இந்த படப்பிடிப்பில் கலந்துக் கொள்கின்றனார்.