கேரளாவையே அதிர வைத்த திருடனான நிவின் பாலி
’தூங்காவனம்’, ‘பழசிராஜா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன் வழங்கும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. இப்படத்தை ‘36 வயதினிலே’, ‘மும்பை போலீஸ்’ புகழ் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார். இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார் , கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார். உதயநாணு தாரம், மும்பை போலீஸ் , ஹவ் ஓல்ட் ஆர் யு போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு பினோத் பிரதான் , படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை சுனில் பாபு, இசை கோபி சுந்தர். உடைகள் வடிவமைப்பு தன்யா, மேக்கப் ரஞ்சித்.
19 அம் நூற்றாண்டில் கயம்குளம் பகுதியில் வாழ்ந்த பழம்பெரும் திருடன் ஒருவரைப் பற்றிய வாழ்க்கை தான் இப்படத்தின் கதை. அத்த்ஜிருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம், பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். குழந்தை பருவத்தில் வறுமையில் வாடிய காரணத்தால் தான், கொச்சுண்ணி திருட்டு விஷயங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கேரள வரலாற்றில் இவரை போன்ற அப்பான, பயங்கரமான திருடன் ஒருவர் இன்று வரை இருந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் 1859 ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட கொச்சுண்ணி, பூஜப்புரா சிறையில் அடைக்கப்பட்டு, அங்கேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.