Mar 24, 2016 05:39 PM

சமையல் கற்றுக் கொள்ளும் சந்தானம்

சமையல் கற்றுக் கொள்ளும் சந்தானம்

சென்னை,மார்ச் 24 : எவர்க்ரீன் க்ளாசிக்கல் ஹிட் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ப்ராண்ட்டை அதிகரிக்கும் வகையில், உருவாகும் படம் ‘சர்வர் சுந்தரம்’. சந்தானம் நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

 

இதற்கிடையில், இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான சில காட்சிகளை கோவாவின் அருமையான லொகேஷன்களில் ஷூட் செய்வதால், இதுவரை பார்த்திராத ரம்மியமான லொகேஷன்கள் கதையின் ஓட்டத்துடன் இணைந்தே வரும்வகையில் கதையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. செட்களுக்குள் எடுக்கப்படும் காட்சிகள் என்ற க்ளிஷேக்களை உடைப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

 

வருகிற திங்கள் கிழமை ஆரம்பிக்கும் இப்படத்தின் ஷூட் அப்படியே ஜூன் மாதம் வரை தொடர்கிறது. கோவா, சென்னை, தஞ்சாவூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களின் பின்னணியில் இப்படம் வளர இருக்கிறது.

 

நகைச்சுவை ப்ரியர்களுக்கு விருந்து வைக்கும் சர்வர் கதாபாத்திரத்தில் நகைச்சுவையின் கதாநாயகனாக சந்தானம் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சர்வராக வந்தாலும், சர்ப்ரைஸ் ஆக வரவேண்டுமென்பதால் சந்தானத்தின் காஸ்ட்யூம் சமாச்சாரங்களிலும் காஸ்ட்யூம் டிசைனர்கள் புதுப்புது டிஸைன்களை உருவாக்கியபடி இருக்கிறார்கள். சமையல் பற்றிய கதை என சொல்லிவிட்டு ஒரு கிச்சன் செட்டில் எடுப்பதில் புதுமையோ, சுவாரஸ்யமோ இருக்காது என்பதால், இந்தியாவில் சமையற்கலையில் மணக்க மணக்க கலக்கும் டாப் 15 செஃப்களை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்து, அவர்களை கன்சல்ட்டன்ட்களாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதற்கும் மேல்  இயக்குநர் ஆன்ந்த் பால்கி தானும் செஃப்  என்பதால், ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அக்கறையுடன் மேற்கொண்டு வருகிறார். 

 

இசையின்  மணம் தூக்கலாக இருக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இரண்டு பாடல்களை முடித்து விட தற்போது மூன்றாவது பாடலுக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

 

இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெறும் செட் மற்றும் காஸ்ட்யூம்கள் என அனைத்து  கதையை மேலும் அழகாக்கும் வகையில், தனித்துவத்துடன் இருக்கவேண்டுமென்பதில் அதிக அக்கறை காட்டப்பட்டு வருகிறது.

 

’சர்வர் சுந்தரம்’ படத்தை பிரம்மாண்டமாக தான் எடுக்கவேண்டுமென முனைப்போடு தயாரித்து வருகிறார் கெனன்யா ஃப்லிம்ஸ் ஜே.செல்வகுமார். இவர் வழக்கமான கதைகளை ஓரங்கட்டிவிட்டு, புதுமையான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.