Aug 19, 2017 01:02 AM
பிரபு தேவா படத்தில் எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குலேபகாவலி’. தற்போது இதே தலைப்பில் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.
முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி தயாராகும் இப்படத்தை எஸ்.கல்யாண் இயக்க, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இப்படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுவதோடு, இப்படத்தில் உள்ள பிளாஸ்பேக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர் இடம்பெறுகிறாராம். இந்த காட்சி தான் பழைய குலேபகாவலிக்கும் தற்போதைய குலேபகாவலிக்கும் இடையிலான இணைப்பு பற்றியும் கூறப்பட்டிருக்கிறதாம்.