Aug 19, 2017 08:00 AM

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் விவகாரம் - தியேட்டர் முதலாளிகளுக்கு ஷாக் கொடுத்த விஷால்

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் விவகாரம் - தியேட்டர் முதலாளிகளுக்கு ஷாக் கொடுத்த விஷால்

நடிகர் சங்க செயலாளராக இருந்த விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல் படியாக, பெப்ஸியை அடக்கியது என்று சொல்லலாம். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் யாராக இருந்தாலும், பிரச்சினை என்று வந்தால் பெப்ஸியின் கை தான் ஓங்கியிருக்கும். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சினையில் பெப்ஸியை வழிக்கு கொண்டு வந்திருக்கிறார் விஷால்.

 

அதாவது பெப்ஸி தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவோம், அதேபோல் தாங்கள் விரும்பும் பெப்ஸி அல்லாத தொழிலாளர்களுடனும் பணியாற்றுவோம், என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் பெப்ஸி வேலை நிறுத்தத்தை தொடங்கியது. ஆனால், பெப்ஸியின் உத்தரவுக்கு கட்டுப்படாத சில சங்கங்கள் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டதால், பெப்ஸி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது. இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கம் தனது நிலையில் உறுதியாக இருந்தது.

 

இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், லோக்கல் கேபிள் சேனல்களில் திரைப்படங்கள், சினிமா பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்புவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், சமீபத்திய திரைப்படங்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

முறையான உரிமம் இன்றி லோக்கல் கேபிள் டி.வி, பேருந்துகள், வேறு மாநில சேனல்களில் தமிழ்ப் படங்கள் ஒளிபரப்பப்படுவதைக் கண்காணிக்க, விஷால் ஒரு குழு அமைத்துள்ளார். 'உரிமம் இன்றி தமிழ்ப் படங்களை ஒளிபரப்பக் கூடாது. வேண்டுமானால், யாரிடம் உரிமம் இருக்கிறதோ அவர்களிடம் அனுமதி பெற்று படங்களை உங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும். இல்லையென்றால், சங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று விஷால் அறிவித்துள்ளார்.

 

மேலும், கூடிய விரைவில் ஆன்லைன் சினிமா டிக்கெட் செய்வதற்கான இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே தொடங்க இருக்கிறதாம். இந்த இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்தால் ரூ.10 மட்டுமே கூதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் மூன்றாக பிரிக்கப்பட்டு, தயாரிப்பாளர், இணையதளத்தின் பராமரிப்பு மற்றும் விவசாயிகளின் நன்மைக்கு பயன்படுத்தப்படுமாம்.

 

ஆன்லைனில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.30 கூடுதல் கட்டணமாக வசூலித்து வரும் திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷாலின் இந்த அறிவிப்பு பெரிய ஷாக் ஆக அமைந்துள்ளது.