வாய்ப்புக்காக முன்னணி நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் - பத்மபிரியா அதிரடி!
சினிமா நடிகைகள் வாய்ப்புக்காக படுகையை பகிர்ந்துக் கொள்வதாகவும், நடிகைகள் என்றாலே படுக்கைக்கு அழைக்கிறார்கள், என்றும் பல நடிகைகள் புகார் தெரிவித்து வரும் நிலையில், நடிகை பத்மப்பிரியா, வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக்கொள்வது புதிய நடிகைகள் மட்டும் அல்ல, பேரும் புகழும் பெற்ற முன்னணி நடிகைகளும் தான், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த பத்மப்ரியா, திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் ‘சிவரஞ்சனியும், இன்னும் சில பெண்களும்’, ‘சீப்’ என்ற இந்திப் படம், ‘கிராஸ்ரோடு’ என்ற மலையாளப் படம் என்று மீண்டும் நடிப்பில் பிஸியாகியுள்ளவர், நடிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து பேட்டில் ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், ஒரு சினிமாவில் முக்கிய வேடம் கிடைக்க வேண்டும் என்றால் நடிகை படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், சினிமா வாய்ப்பு கிடக்காது என்றால், அதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்?
இது புதிய நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெயரும் புகழும் பெற்ற பிரபல முன்னணி நடிகைகளுக்கும் இதுபோன்ற விஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆக வேண்டும் என்று நினைப்பதால் இந்த நிலை. அப்படி படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவரும் வெற்றி அடைவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா?
இது போன்ற விஷயங்களை நான் தவிர்த்ததால் தான் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டேன். நல்ல கதை இருந்தால் தான் நான் நடிப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். நடிப்பை தவிர வேறு எதுவும் என்னிடம் இருந்து அவர்களுக்கு கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். அதனால் தான் என்னை வேண்டாம் என்று ஒதுக்குகிறார்கள், என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பல நடிகைகள், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கபப்டுவது குறித்து பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது பத்மபிரியாவும் தனது பங்கிற்கு இந்த விஷயம் குறித்து பேசியிருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் படங்களின் இயக்குநர்களுடன் மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கிய பத்மபிரியா, சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து பேசியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.