’விவேகம்’ படத்தால் பெரும் நஷ்ட்டம் - உண்மையை உடைத்த சினிமா பிரபலம்!
கடந்த வாரம் வெளியான அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு முதல் காட்சிக்குப் பிறகு, பல திரையரங்குகளில் கூட்டமே இல்லை என்று கூறப்பட்டாலும், பலர் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கிறது என்று கூறி வந்தனர்.
அதே சமயம், முதல் நாளைக் காட்டிலும் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாகவும், நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியான பிறகு எந்த படமும் செய்யாத வசூலை விவேகம் செய்து வருவதாக கூறியதோடு, ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்துவிட்டதாக கூறப்பட்டது.
மேலும், படம் சரியில்லை என்று விமர்சனம் செய்த பலர் அஜித் ரசிகர்களால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ் திரையுலக வியாபாரத் துறையில் முக்கிய நபராக கருதப்படுபவர் வெங்கட். தாடி வெங்கட் என்று அழைக்கப்படும் இவர் தற்போது நடிகராகவும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், பல படங்கள் ரிலீஸ் ஆக காரணமாகவும் இருக்கும் இவர், சினிமா வியாபாரத்தில் புலி என்றாலும் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒருவர் விவேகம் படம் குறித்த உண்மையான நிலவரத்தின் உண்மையை உடைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து இணையதளம் ஒன்றில் பதிவிட்டுள்ள வெங்கட், “விஷால் சொன்னது போல ஐந்து நாட்களுக்கு பிறகே விவேகம் படம் குறித்து எழுதுகிறேன்.
உலக வியாபாரம் குறித்த பல உண்மைகள் மறைக்கப்படுகிறது என்கிற நிலையில் தமிழ்நாட்டில் fulla கல்லா கட்ட முடியாதபோது உலகத்தரம் என்கிற பெயரில் அயல் நாட்டில் அதிக செலவு செய்யலாமா தயாரிப்பாளரே?
அதே போல, உங்களை நம்பி வினியோகஸ்தர்கள் கொட்டிய முதலீட்டையும் ரசிகர்கள் செய்த செலவையும் சம்மந்தப்பட்டவர்கள் மதிக்க வேண்டும்.
வித்தியாசமாக என்ற பெயரில் விபரீத செலவு செய்வது விவேகமல்ல..
காரணம் நஷ்டப்படுவது ஆசைப்பட்டு காசை இழப்பது முட்டாள் முதலீட்டாளர்களே தவிர, நடிகர்களும் தொழில் நுட்பக்கலைஞர்களும் தொழிலாளர்களும் நிதியாளர்களும் அல்ல.
எத்தனை பூச்சு பூசினாலும் எகிறி எகிறி குதித்தாலும் சரி..
உண்மையை உரக்க சொல்கிறேன்….
விவேகம் படம் வணிக ரீதியாக பலருக்கு நஷ்டமே..” என்று தெரிவித்துள்ளார்.