Aug 31, 2017 12:08 PM

மெட்வே மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு - வைரமுத்து திறந்து வைத்தார்

மெட்வே மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு - வைரமுத்து திறந்து வைத்தார்

கடந்த 2012 ஆம் ஆண்டு டாக்டர் டி.பழனியப்பன் அவர்களால் சென்னை கோடம்பாக்கம் அருகே உள்ள டிரஸ்ட்புரத்தில் தொடங்கப்பட்டது மெட்வே மருத்துவமனை.

 

நோயாளிகளை கனிவோடும் மரியாதையோடும் நடத்தி அவர்களது நோயினைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களை குணப்படுத்தி எவ்வளவு விரைவாக அவர்கள் வீடு திரும்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பது தான் இந்த மருத்துவ மனையின் தனிச்சிறப்பு. சுருங்கச் சொல்வதென்றால் வருமானத்தை  குறிக்கோளாகக் கொள்ளாமல் நோயாளியின் பிணி தீர்க்கின்ற குறிக்கோளை தாரக மந்திரமாக வைத்துக் கொண்டு செயல்படும் மருத்துவ மனையாக திகழ்வதுதான் மேட்வே மருத்துவமனை.

 

கும்பகோணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள மக்களுக்கும் தமிழகத்தின் தலை நகரத்தில் கிடைக்கும் தலை சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் .நூறு படுக்கைகளைக் கொண்ட மெட்வே பல நோக்கு மருத்துவமனை (MEDWAY MULTI SPECIALITY HOSPITALS) 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

 

மெட்வே மருத்துவமனையின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் இன்று கோடம்பாக்கம் யுனைட்டெட் இந்தியா காலினியில் பிரம்மாண்டமாக நிமிர்ந்து நிற்கும் மெட்வே ஹாஸ்பிடல்ஸ் சூப்பர் சிறப்பு மருத்துவமனை.

 

இன்று நடைபெற்ற புதிய மெட்வே மருத்துவமனை திறப்பு விழாவில் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, டிவி தொகுப்பாளரும் நடிகருமான கோபி, நடிகர் பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டனர். வைரமுத்து ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைக்க, பிரபு மற்றும் அவரது மனைவி புனிதா பிரபு, கோபிநாத் ஆகியோர் குத்து விளக்கி ஏற்றினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபு, டாக்டர் டி.பழனியப்பன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையிலேயே நோயாளிகள் பாதி குணமடைந்து விடுகிறார்கள். மருத்துவராக மட்டும் இன்றி நல்ல நண்பராகவும் அவர் நோயாளிகளிடம் நடந்துக் கொள்ளும் விதம் பெரும் மகிழ்ச்சியை தருகின்றது, என்று தெரிவித்தார்.

 

வைரமுத்து பேசும் போது, டாக்டர் டி.பழனியப்பன் நினைத்திருந்தால் எந்த துறையில் வேண்டுமானாலும் சாதித்திருக்கலாம். ஆனால், அவர் மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்ததால் மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். வெறும் பணத்திற்காக மட்டும் அல்லாமல் மனிதாபிமானம் அடிப்படையில் மெட்வே மருத்துவமனை சிகிச்சை அளித்து வருவதை நான் நன்கு அறிவேன். டாக்டர் பழனியப்பன், இத்தோடு நிறுத்தாமல் மேலும் பல உயரங்களை சென்றடைய வேண்டும், என்று நான் வாழ்த்துகிறேன், என்றார்.

 

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையிலும், மூளை மற்றும் நரம்பு தண்டு அறுவை சிகிச்சை,  நீரழிவு காரணமாக கால்களில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை சரி செய்வதில் தனி இடத்தை  இன்று மெட்வே மருத்துவமனை பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் மெட்வே ஹாஸ்பிடலில் அணி வகுத்து நிற்கும் மிகத்  திறமையான மருத்துவர்கள் தான். 

 

அதி நவீன சிகிச்சையை அளிப்பதற்குரிய எல்லா வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள மெட்வே மருத்துவமனை சூப்பர் சிறப்பு மருத்துவமனை கோடம்பாக்கம் வாழ் மக்களுக்கு மட்டுமின்றி சென்னையில் உள்ள அனைவருக்குமே ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.