Jan 17, 2025 02:03 PM

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. “கல்லூரூம்...” என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகரக்ளிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், வெளியாகி ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்கள கடந்துள்ளது.

 

விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க,  கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' கல்லூரூம்..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் பின்னணி பாடகர் ஹரிசரண் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு இசை ரசிகர்களிடத்தில் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.