பாலிவுட் நடிகர்களுடன் பிரபல நாடக கலைஞர்கள் இணைந்து அரங்கேற்றும் ‘ஹமாரே ராம்’ மேடை நாடகம்!

இந்தியாவின் முன்னணி நாடக நிறுவனமான ஃபெலிசிட்டி தியேட்டர் ‘ஹமாரே ராம்’ என்ற இதிகாச நாடகத்தை பெருமையுடன் வழங்குகிறது. கௌரவ் பரத்வாஜ் இயக்கியுள்ள இந்தப் பிரம்மாண்டமான படைப்பு, ராமாயணத்திலிருந்து இதற்கு முன்பு மேடையில் சித்தரிக்கப்படாத காட்சிகளைத் தொகுத்து வழங்க உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அஷுதோஷ் ராணா ராவணனாகவும், புகழ்பெற்ற நடிகர் ராகுல் ஆர் புச்சார் ராமராகவும், டேனிஷ் அக்தர் ஹனுமானாகவும், தருண் கன்னா சிவனாகவும், ஹர்லீன் கவுர் ரேகி சீதாவாகவும், கரண் ஷர்மா சூர்ய தேவாவாகவும் நடிக்கின்றனர். இந்த பிரபலங்களுடன் இணைந்து நாடக உலகைச் சேர்ந்த பல திறமையான கலைஞர்களும் நடிக்கின்றனர்.
இந்தியா முழுவதும் பல நகரங்களில் நடந்த ஹவுஸ்ஃபுல் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை சர் முத்தா வெங்கடசுப்பராவ் கச்சேரி அரங்கில் நடைபெறும் ’ஹமாரே ராம்’ நாடகம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும்.
புகழ்பெற்ற பின்னணி பாடகர்களான கைலாஷ் கெர், சங்கர் மகாதேவன் மற்றும் சோனு நிகம் ஆகியோர்’ ஹமாரே ராம்’ நாடகத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அசல் பாடல்களுக்கு தங்கள் குரல்களை வழங்கி,
நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார்கள். அற்புதமான நடிப்புத்திறன், அனல் பரக்கும் வசனங்கள், ஆன்மாவைத் தூண்டும் இசை, துடிப்பான நடன அமைப்பு, நேர்த்தியான உடைகள் மற்றும் மேடையை அலங்கரிக்கும் அதிநவீன
கண்கவரும் விளக்குகள் ஆகியவை இந்த பிரம்மாண்டமான நாடக அனுபவத்தற்கு உறுதியளிக்கிறது.
’ஹமாரே ராம்’-ன் தனித்துவம் ராமாயணத்திலிருந்து சொல்லப்படாத கதைகளை வெளிப்படுத்துவதில் உள்ளது. வண்ண விளக்குகள், பின்னணி இசை, LED-யால் ஆன பின்னணி திரைகள், மற்றும் உயர் தொழில்நுட்ப VFX மாயாஜாலங்களை உள்ளடக்கிய இந்த மகத்தான தயாரிப்பு, ராமாயணத்தின் சொல்லப்படாத அத்தியாயங்களை மேடையில் வெளிப்படுத்துகிறது. வரலாற்றையும், கலாச்சாரத்தையும் தடையின்றி கலந்து ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும் ’ஹமாரே ராம்’ வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இது ஒரு கலாச்சார கொண்டாட்டம்.
ஃபெலிசிட்டி தியேட்டரின் தயாரிப்பாளரும், நிர்வாக இயக்குநருமான ராகுல் புச்சார் கூறுகையில், ”ராமாயண கதைக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வருவதற்காகவும், இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையிலும்
’ஹமாரே ராம்’ நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அஷுதோஷ் ராணாவின் உணர்ச்சிபூர்வமான ராவணனின் சித்தரிப்பு, பிரபல பின்னணிப் பாடகர்களின் இசைத் திறமையுடன் இணைந்து, ஒரு கலாச்சார யாத்திரையை
உறுதியளிக்கிறது. ஒரு சிறந்த விளம்பரப்படத் தயாரிப்பாளரான இயக்குனர் கௌரவ் பரத்வாஜ், இந்த முயற்சியில் ஒரு துடிப்பான அணுகுமுறையை கையாள்கிறார், மேலும் பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளைக் கண்டு
மெய்மறக்கத் தயாராகலாம்”, என்றார்.
ஃபெலிசிட்டி தியேட்டரின் உன்னதமான முயற்சிகள் மேடையை பாரம்பரியமும் புதுமையும் தடையின்றி ஒன்றிணைக்கும் கேன்வாஸாக மாற்றுகின்றன.
’ஹமாரே ராம்’-க்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய:
https://in.bookmyshow.com/plays/humare-ram-ft-ashutosh-rana-and-rahull-r- bhuchar/ET00376688/booking-step/datetime?city=Chennai&venueCode=SMVR
தேதி : 29 & 30 மார்ச் 2025
நேரம் : 2:20 PM & 7:00 PM
இடம் : சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கச்சேரி அரங்கம்,
ஹாரிங்டன் சாலை, சென்னை.