Aug 02, 2017 08:07 AM
‘விஐபி-2’ ரிலிஸ் தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷின் நடிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை காஜோல் நடித்திருக்கிறார்.
தனுஷ் கதை எழுத, சவுந்தர்யா திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
ஷான் லோலண்ட் இசையில் ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட ஆகியுள்ள நிலையில், படத்தின் டிரைலர்களாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்சார் தொடர்பான சில காரணங்களுக்காக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பதோடு, வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.