Mar 06, 2018 08:02 AM

ஜெய்க்கு ஜோடியாகும் மூன்று முக்கிய ஹீரோயின்கள்!

ஜெய்க்கு ஜோடியாகும் மூன்று முக்கிய ஹீரோயின்கள்!

கமல் - ஸ்ரீபிரியா நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘நீயா’ இந்திய சினிமாவின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தற்போது இப்படத்தின் தலைப்பில், அதாவது ‘நீயா 2’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகிறது.

 

இப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா என்று மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

 

அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர் படமாக சுமார் ரூ.10 கோடி செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எல்.சுரேஷ் இயக்குகிறார். இவர் விமல் நடித்த ‘எத்தன்’ படத்தை இயக்கியவர்.

 

ஷபிர் இசையமைக்கும் இப்படத்திற்கு இராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்ய, செளமி கிருஷ்ணன் எடிட்டிங் செய்கிறார். ஐயப்பன் கலைத்துறையை கவனிக்க, ஸ்டண்ட் ஜிஎன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். கலா, விஜி ஆகியோர் நடனம் அமைக்க, கபிலன், பவன் மித்ரா, மோகன்ராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்.