Jun 08, 2019 05:19 AM

44 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல நடிகை!

44 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல நடிகை!

’மாநகர காவல்’, ‘குறும்புக்காரன்’, ’உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் சுமன் ரங்கநாதன்.

 

90 களில் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என்று ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

 

Suman Ranganathan

 

தயாரிப்பாளர் வாலியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சுமன் ரங்கநாதன், கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

 

இந்த நிலையில், விவாகரத்து பெற்ற 12 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள நடிகை சுமன் முடிவு செய்துள்ளார். தொழிலதிபர் சஜன் சின்னப்பா என்பவரை அவர் 2 வதாக திருமணம் செய்ய உள்ளார்.

 

Suman Ranganathan Marriage