Apr 24, 2024 06:29 PM
உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். ஜெயம் ரவியும் அவ்வபோது அவர்களை சந்தித்து உற்சாகமளித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த, சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ராஜா என்பவர், உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார்.
தனது ரசிகரின் திடீர் மரணம் பற்றி அறிந்த நடிகர் ஜெயம் ரவி, மறைந்த ராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும், குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.