விவசாயி மகளுக்கு 'திருமாங்கல்யம்' பரிசு - அபி சரவணன், கோபி வழங்கினார்கள்
விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் அபி சரவணன், தன்னைச் சேர்ந்த் சினிமா பிரபலங்கள் பலரையும் விவசாயிகளுக்கு உதவிகள் செய்ய வைத்து வருகிறார்.
மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவும்படி, விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொண்ட இளங்கீரன் என்பவர் அபி சரவணனிடம் கேட்டு கொண்டதற்கு இனங்க, அவர் தயாரிப்பாளர் கோபி என்பவரிடம் உதவி பெற்று விசாயி மகளுக்கு திருமாங்கல்யம் பரிசு வழங்கியுள்ளார்.
இது குறித்து அபி சரவணனிடம் கேட்டதற்கு, “இளங்கீரன் அண்ணன் என்னை சமீபத்தில தொடர்புகொண்டு மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவ கேட்டுக்கொண்டார்.
விவசாயிகளுக்கு உணவளிக்கவே முழுவீச்சாக செயல்படுவதால் இதற்கு யாரை அணுகுவது என்று யோசித்த வேளையில் நடிகர் விமல் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.கே . செல்வா சகோ என்னை அரசு பிலிம்ஸ் உரிமையாளர் கோபி அவர்களிடம் அறிமுகபடுத்தினார்.
அவரிடம் அறிமுகமாகி மூன்று நிமிடம் மட்டுமே பேசிய நிலையில் உடனடியாக விவசாயி மகளின் திருமண உதவியை பற்றி பேசினேன். பேசிய மூன்று வினாடியில் உடனே ஒகே., எனக்கூறி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.
விவரம் எதுவுமே கேட்கவில்லை, உடனடியாக இளங்கீரன் அவர்களை தொடர்பு கொண்ட பேசினேன். திருமாங்கல்யம் அன்பளிப்பாக வழங்க முடிவு செய்யப்ட்டது. உடனடியாக கல்யாண் ஜீவல்லரி சென்று அவர்கள் விரும்பிய வடிவில் திருமாஙகலயம் எனது அம்மா கரங்களால் வாங்கப்டடது..
திருமாங்கல்ய செலவு போக மீதிதொகை விவசாயிகளின் நேற்றைய ஒருநாள் உணவுக்காக செலவளிக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள ஒரு முதியோர் இலலத்திற்கு ஓணம் சமபந்தி விருந்திற்கு சிறப்பு விருந்திராக செல்ல வேண்டி இருந்ததால் எனது தந்தை ராஜேந்திர பாண்டியன் மற்றும் .கோபி அவர்கள் சார்பில் மன்னார்குடி நேரடியாக சென்று மணமகளிடம் திருமாங்கல்யம் அளித்து மேலும் மணமக்களுக்கு பட்டுசேலை வேஷ்டியுடன் ஆசியளித்து திரும்பினார.” என்று தெரிவித்தார்.