Feb 26, 2018 12:45 PM

நடிகர் மாதவனுக்கு ஆபரேஷன்! - மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மாதவனுக்கு ஆபரேஷன்! - மருத்துவமனையில் அனுமதி

‘இறுதிச் சுற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் கவனம் செலுத்தி வரும் மாதவன், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள மாதவன், அதே சமயம் கதை தேர்விலும் ரொம்ப கவனமாக  இருக்கிறார்.

 

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்தில் சிம்பு வேடத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், மாதவன் தனது தோள் பட்டையில் ஏற்பட்ட பிரச்சினைக்காக ஆபரேஷன் செய்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த அபரேஷனின் போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.