Jun 15, 2021 08:42 AM
கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய் சேதுபதி!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
அதன்படி நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கினார்.