கதறி அழுத ஆர்த்தி - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸில் முதலில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் நிகழ்ச்சியில் திரும்ப பங்கேற்றுள்ளார்கள். இதில் ஒருவரான ஆர்த்தி, முன்பு போல இல்லாமல், வேறு மாதிரியாக நடந்துக்கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென்று எழுந்த ஆர்த்தி கதறி கதறி அழ தொடங்கினார். இதனைப் பார்த்த வையாபுரி ஆர்த்தியிடம் விஷயத்தை கேட்க, தனது அம்மாவின் நினைவு நாள் என்பதால் தான் அழுவதாக ஆர்த்தி கூறினார்.
அம்மாவின் நினைவு நாளன்று வீட்டுக்கு வந்திடுவேன், என்று தனது அப்பாவிடம் ஆர்த்தி கூறினாராம். ஆனால், சூழ்நிலை காரணமாக அவரால் வீட்டுக்கு செல்ல முடியாதல் தனது அம்மாவை நினைத்து அழுததாகவும், சில நிமிடங்கள் அழுத்துவிட்டு சரியாகிவிடுவேன், என்று கூறியவருக்கு நடிகை பிந்து மாதவியும் ஆறுதல் கூறினார்.