பிரபல நடிகைக்கு ரயிலில் பாலியல் தொல்லை!
தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக நேற்று நடிகை அமலா பால் போலீசில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு பிரபல நடிகையான சனுஷாவும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
‘ரேனிகுண்டா’ படம் மூலம் தமிழில் அறிமுகமான சனுஷா, ‘நந்தி’, ‘எத்தன்’, ‘அலெக் பாண்டியன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கொடி வீரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சனுஷா சென்றிருக்கிறார். அப்போது அவர் தூங்கிய போது, அண்டோ போஸ் என்பவர், அவரது உதட்டில் கை வைத்துள்ளார். உடனே விழித்துக்கொண்ட சனுஷா, இது குறித்து போலீசிடம் புகார் தெரிவித்து அவரை பிடித்துக் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து கூறிய சனுஷா, “ரயிலில் ஏற்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. சந்த சம்பவத்தின் போது, என்னுடன் பயணித்தவர்கள் மட்டுமே எனக்கு உதவி செய்தார்கள். மற்ற பயணிகள் யாரும் உதவிக்கு வரவில்லை. ஒரு சாதாரண பெண்ணுக்கு இதுபோல் நடந்திருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாள்.” என்று தெரிவித்துள்ளார்.