Feb 07, 2018 12:11 PM

மகளின் காதல் திருமணம் குறித்து சீதாவின் நிலைபாடு இதுதான்!

மகளின் காதல் திருமணம் குறித்து சீதாவின் நிலைபாடு இதுதான்!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். விவாகரத்திற்குப் பிறகு சீதா, திரைப்படங்கள் மற்றும் டிவி தொடங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், பார்த்திபன் - சீதா தம்பதியின் இளைய மகளான கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மணிரத்னத்தின் ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவருக்கு, ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் பல வந்தாலும் அதை தவிர்த்துவிட்டு மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்சனும், கீர்த்தனாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. 

 

பார்த்திபனிடம் வசித்து வரும் கீர்த்தனாவின் திருமணத்திற்காக பார்த்திபன், திரையுலகின் முக்கிய நபர்களை நேரில் சென்று கீர்த்தனாவின் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். மேலும், விவாகரத்து பெற்ற தனது முன்னாள் மனைவியான நடிகை சீதாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். ஆனால், தனது மகள் திருமணம் குறித்து சீதா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.

 

இந்த நிலையில், தனது மகளின் காதல் திருமணம் பற்றி சீதா, முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசும்போது, ”என் சின்ன மகள் கீர்த்தனாவுக்கு கிடைத்த மாப்பிள்ளை போல் நாங்களே தேடினாலும் கிடைக்காது.

 

கடந்த 8 வருடமாக காதலித்து தற்போது கல்யாணம் செய்துகொள்ள போகிறார்கள். என் மகள் காதல் திருமணம் செய்யப்போகிறாள் என்பதில் எனக்கு வருத்தம் கிடையாது. கீர்த்தனாவின் காதலை நான் ஆதரிக்கிறேன், மதிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.