Apr 11, 2025 07:28 PM

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை தபு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை தபு!

கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில்  அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.

 

நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர்  பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.

 

இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான  கதைத்  தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் அவரது பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும்.

 

Puri Jegannath and Tabu

 

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

 

இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.