விஜய்க்கு ஆதரவு தெரிவித்த அதிமுக!
’மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக பொது மக்களுடம், பல ரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மாநில அரசான அதிமுக தற்போது விஜய்க்கு ஆதரவாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சென்சார் போர்டு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது, காரில் வரும்போது நான் சில செய்திகளை படித்தேன். சென்சார் போர்டு சில காட்சிகளை நீக்குவதாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.” என்று கூறினார்.
அப்போது, விஜய் குறித்து தனிப்பட்ட வகையில் விமர்சனங்கள் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற நிருபர்கள் கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமார், ”என்னை பொறுத்தளவில் அரசியலாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் சரி, யாரையும் கொச்சைப்படுத்த கூடாது. யாராக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும். அதுதான் பண்பாடு உள்ள விஷயம்.
அண்ணாவிலிருந்து, எம்ஜியாரிலிருந்து, ஜெயலலிதாவரை எங்களுக்கு, அடுத்தவர்களை மதிக்க கற்றுக்கொடுத்துள்ளனர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கொள்கையில் வந்தவர்கள் நாங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.