அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் முதல் பார்வையை வெளியானது!

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. டி கிரியேஷன்ஸ் சார்பில் எம்.திருமலை தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன்.
நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய,எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் முதல் பார்வை போஸ்டர் இளைஞர்களை கவர்ந்ததோடு, சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.