Mar 18, 2022 07:00 PM

லைகா நிறுவனத்துடன் இணைந்த அஜித்! - 62 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லைகா நிறுவனத்துடன் இணைந்த அஜித்! - 62 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித்தின் 61 வது படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாகவும், போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக அஜித்தின் 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், அஜித்தின் 62 வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகியுள்ளது. அஜித்தின் 62 வது படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

இது குறித்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம். அந்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஏற்றிருக்கிறார்.

 

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கும், அடுத்த ஆண்டு மத்தியில் படம் வெளியாகும். படத்தில் பங்குபெறும் மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

 

Ajith and Tamil Kumaran

 

அஜீத்தோடு இணைந்து பணியாற்றுவதில் லைகா நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸுடன் அஜித் இணைந்திருப்பதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.