Oct 28, 2017 06:28 AM
30 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட அமலா பால்!
விவாகரத்துக்குப் பிறகு நடிப்பில் பிஸியாகியுள்ள அமலா பால், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, நேற்று முன் தினம் (அக்.26) தனது 26 வது பிறந்தநாளை எர்ணாகுளத்தில் அமலா பால் கொண்டாடினார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளியில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அமலா பால், ஏழ்மை நிலையில் உள்ள 30 பெண் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்டாராம்.