Jan 06, 2023 05:31 PM

கலைஞர்களுக்காக புதிய தளத்தை உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!

கலைஞர்களுக்காக புதிய தளத்தை உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தனது பிறந்தநாளில் கலைஞர்களின் படைப்புகளை உலகிற்கு தெரியப்படுத்தும் புதிய டிஜிட்டல் தளம் பற்றிய அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் இன்று வெளியிட்டுள்ளார்.

 

‘கற்றார்’ (KATRAAR) என்ற பெயரில் உருவாகும் இந்த டிஜிட்டல் தளம், இசை மற்றும் பிற கலைகளை உலக அளவில் எடுத்து செல்லும் களமாக செயல்பட உள்ளது.

 

இதில் கலைஞர்கள் தங்களது படைப்புகளை வெளியிடுவதோடு, பணமாக்கவும், பட்டியலிடவும் செய்யலாம். அதாவது, கலைகள் போன்றவற்றை கலைஞர்கள் நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்கலாம்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை ’கற்றார்’ தளம் மூலம் வெளியிடவுள்ளார். மேலும், பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த தளத்தில் வெளியாக உள்ளது.

 

HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.

 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்கற்ற செலச்சொல்லு வார்.