’அறம் செய்’ இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் படம் - தொல்.திருமாவளவன் பாராட்டு

தாரகை சினிமாஸ் சார்பில் சுவேதா காசிராஜா தயாரிப்பில், எஸ்.பாலு வைத்தியநாதன் இயக்கியதோடு, ஒளிப்பதிவு செய்து நடித்திருக்கும் படம் ‘அறம் செய்’. அஞ்சனா கீர்த்தி, மேகாலி மீனாட்சி, லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், படத்தை பாராட்டி பேசுகையில், “இயக்குநர் எஸ். பாலு வைத்தியநாதன் அவர்களின் கதை எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு என்ற அனைத்து பொறுப்புகளையும் ஏற்று உருவாக்கி இருக்கிற படைத்திருக்கிற ’அறம் செய்’ திரைப்படத்தை பார்த்தோம். சுவேதா அவர்கள் இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர், இயக்குநர் எஸ். பாலு வைத்தியநாதன் அவர்கள் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம் என்பதே இலக்கு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை அவர் உருவாக்கி இருக்கிறார்.
கல்லூரிகளை தனியார் மயமாக்குவது அதனால் வழிமுறைகளின் சமூகத்தை சார்ந்த மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு கதையோட்டமாகவும், அடிப்படை மாற்றம் இல்லாமல் அரசியலில் எந்த புதிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்கிற அடிப்படையில் ’அறம் செய்’ அரசியல் அமைப்பு என்கிற இயக்கத்தை உருவாக்கி போராடுகிற இளைஞர்கள் ஒருபுறம் என்கிற அடிப்படையில் இந்த கதையை அவர் உருவாக்கி இருக்கிறார். மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்லூரியை தனியார் மயக்கமாகக் கூடாது என்று உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுக்குகிறார்கள். தொடர் உண்ணாவிரதத்தை நடத்தி தொடங்கி பிறகு அதனை சாகும் வரை உண்ணாவிரத அறப்போராட்டமாகவும், அரசியல் தலையீடுகளால் மாணவர்கள் வன்முறைக்கு இலக்காகுகிறார்கள். போராடுகிற மாணவி ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார். அந்த போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற ஒரு நிலைப்பாட்டையும் இந்த திரைப்படத்தில் இயக்குநர் படைத்திருக்கிறார்.
ஒருபுறம் ஒட்டுமொத்தத்தில் அரசியலின் மாற்றத்தை உருவாக்க வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியல் இயங்க வேண்டும். மாமேதை கார் மாக்ஸ் போன்றவர்களின் சிந்தனைகள் மக்களிடத்தில் போய்ச் சேர வேண்டும். விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்கம் அணித்திரள வேண்டும் என்கிற அடிப்படையிலே இளைஞர்கள் கதாநாயகிகளாக அஞ்சனா கீர்த்தி பொறுப்பேற்று நடித்திருக்கிறார். ஒரு துடிப்புள்ள இளம் பெண்ணாக புரட்சிகர சிந்தனையுள்ள பெண்ணாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறம் செய்வதே அரசியல் களம் என்ற கொள்கை முழக்கத்தோடு போன்றவற்றை அவர்கள் புதிய அமைப்பை உருவாக்கிறார்கள். அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ஆயுத போராட்டம் ஒரு தீர்வல்ல அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டமே போதும் மக்களே நமக்கு ஆயுதம் என்றவர் போதிக்கிறார். அவர் உயர்குடியிலே பிறந்தவர் உச்ச நீதிமன்ற நீதிபதியின் பேத்தி ஆனால் மகாகவி பாரதியாரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரா போஸை அவர்களின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்கிற துடிப்புமிக்க இளம் பெண் அவருடைய தலைமையிலே ஒரு படை, அரசியல் படை, கருத்தியல் படை அமைக்கப்பட்டு அவர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போது போராட்டத்தை அறிவிக்கிறார்கள். அந்த போராட்டம் வெகு மக்கள் போராட்டமாக தருணமிக்கிறது. பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அந்த அறம் செய் அரசியல் அமைப்புகளோடு இணைந்து தலைமை செயலகத்தை முற்றிகையிட அணிதிரளுகிறார்கள். அதிலும் அரசியல் தலையீடு முதலமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் தூண்டுதலின் பேரில் குண்டர்கள் அந்த பேரணியில் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள். வெடிகுண்டு வீசி வன்முறை வெறியாட்டத்தில் இறங்குகிறார்கள். அதிலே இரண்டு போராளிகள் உயிரிழக்கிறார்கள். அப்படி உயிரிழந்த நிலையிலும் கூட நம்முடைய பயணம் நின்றுவிடக்கூடாது, இலக்கை நோக்கிய பயணம் தீவிரபட வேண்டும் என்று இளைஞர்களுக்கு போதிக்க கூடிய ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி அவர்கள் நடித்திருக்கிறார். அவருடைய தாத்தா உச்சநீதிமன்ற நீதிபதி அவரை திருத்துவதற்கு முயற்சித்தும் கூட நீங்கள் கற்றுக்கொடுத்த அரசியல் தான் என்னை இயக்குகிறது. அன்றைக்கு நீங்கள் அதை விதையாக பதித்தீர்கள் அந்த விதை இன்று வளந்து விரிச்சிகமாக தருணமித்து இருக்கிறது. ஆகவே இந்த தேசத்தின் நலனுக்காக மக்களின் விடுதலைக்காக நான் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன், என்று அவர் கிளம்புகிற போது உங்கள் பாதை ஆபத்தானது பாதுகாப்புக்கு என்னுடைய துப்பாக்கியை வைத்துக்கொள் என்று தாத்தா கொடுக்கிறபொழுது, அந்த துப்பாக்கியை திருப்பி தாத்தாவிடத்திலே கொடுத்து நாங்கள் நடத்துகிற போராட்டம் ஆபத்தானது தான் அதற்கு ஆயுதம் ஒரு தீர்வல்ல மக்களே எங்களுக்கு ஆயுதமாக இருக்கிறார்கள் என்று எங்கள் மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையே எங்கள் பாதுகாப்புக்கு எனவே ஆயுதம் தேவையில்லை என்று துப்பாக்கியையும் தனது தாத்தாவிடமே திருப்பி கொடுத்து விடுகிறார்.
இப்படி இயக்குநர் எஸ். பாலு வைத்தியநாதன் அவர்கள் திலீபன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார். கல்லூரியின் போராட்டத்தை அவர்கள் தலைமை தாங்கி வழிநடத்துகிறார் . ஆனால் அந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டவில்லை அது வெகு மக்கள் போராட்டமாக வடிவம் பெறவில்லை எனவே அறம் செய் அரசியல் அமைப்போடு இணைந்து அரசியல் மாற்றத்திற்காக போராடுவதாக முடிவெடுக்கிறார். அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஆயுதங்களோடு அந்த அமைப்பிலே தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆயுதம் ஏந்தி வருகிற போது அந்த அறம் செய் அரசியலமைப்பை வழிநடத்தக்கூடிய இளம் பெண் நீங்கள் நினைப்பதை போல ஆயுதம் ஏந்தி போராடியதற்கு தீர்வு காண முடியாது. மக்களை அமைப்பாக முடியாது மக்களையே நம் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று மக்களை அரசியல் படுத்த வேண்டும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் அவர்களிடத்திலே மருத்துவ கல்லூரி மாணவர்களிடத்திலே எடுத்துக்கூறி எல்லோரும் இணைந்து நம்முடைய பயணத்தை தொடர்வதாக இந்த திரைப்படத்தை முடித்திருக்கிறார்.
இயக்குநர் எஸ். பாலு வைத்தியநாதன் அவர்கள். அரசியல் தலையீடுகளால் எப்படி மாணவ சமூகம் பாழாகிறது இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் கல்லூரிகளில் மாணவர்களிடையே கஞ்சா போதை பழக்கங்கள் எப்படி பரவி இருக்கிறது மது பழக்கத்தால் எப்படி சீரழிகிறார்கள் என்பது போன்ற காட்சிகளை அங்கங்கு இணைத்திருக்கிறார். அவருடைய நோக்கம் மிகவும் போற்றுதலுக்குரியது ஆட்சி மாறாட்டத்திற்கான போராட்டமாக அல்லாமல் வெளிப்படை மாற்றத்திற்கான போராட்டமாக நம்முடைய மக்கள் போராட்டம் தருணமிக்க வேண்டும் என்பது தான் இந்த திரைப்படத்தின் ஓற்றைவரி கருத்தாகும். ஒரு புரட்சிகரமான சிந்தனையை மையமாக கொண்டு ஆயுதம் தீர்வல்ல அறிவே ஆயுதமாக இயங்கப்பட வேண்டும் அதற்கு நமக்கு தலைவர்கள் முன்மாதிரியாக வழிகாட்டியிருக்கிறார்கள். மாக்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற அந்த தலைவர்களை நாங்கள் உள்வாங்கிக்கொண்டு இந்த களத்தில் இயங்க வேண்டும் என்று இளம் தலைமுறைகளுக்கு புரட்சிகரமான மாற்றம் நிகழ வேண்டும் என்று துடிக்கிற அனைவருக்கும் போதிக்கிற ஒரு படமாக வழிகாட்டுதல் படமாக இயக்குநர் எஸ். பாலு வைத்தியநாதன் அவர்களின் இந்த திரைப்படம் அறம் செய் என்பது அமைந்திருக்கிறது. இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.