கவனம் ஈர்க்கும் இவி.கணேஷ் பாபுவின் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்!
நடிகர், எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்ட இவி.கணேஷ் பாபு, திரைப்படம் மட்டும் இன்றி விளம்பர படங்கள், விழிப்புணர்வு குறும்படங்கள் இயக்குவதிலும் முத்திரை பதித்து வருகிறார். அந்த வகையில், வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, வாக்காளர்களுக்கு விரிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்திருக்கும், விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இவி.கணேஷ் பாபு இயக்கி நடித்திருக்கிறார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும், தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய வேண்டும், என்ற நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு குறும்படங்களை தயாரித்து வருகிறது. அதில் பார்வையற்றவர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதையும், அதற்காக தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் சிறப்பு முறையையும் விளக்கும் வகையில் குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கும் இவி.கணேஷ் பாபு, பார்வையற்றவர்கள் மூலம் வாக்களிப்பது என்பது எவ்வளவு முக்கியம், என்பதை பார்வையுள்ளவர்களுக்கும் விளக்கிய விதம் பாராட்டும்படி உள்ளது.
செழியன் குமாரசாமி தயாரிப்பில், ராஜராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த குறும்படத்திற்கு சுராஜ்கவி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.