பாகுபலி அரண்மனைகளை பார்க்க மக்களுக்கு அனுமதி!
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதோடு, இந்திய சினிமா வரலாற்றில் தனி முத்திரை பதித்த படமாகவும் உள்ளது.
சரித்திரக்கால படமாக உருவான இப்படத்தின் பிரம்மாண்டம் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. படத்தில் இடம்பெறும் மகிழ்மதி தேசத்து அரண்மனை, குந்தலநாட்டு அரண்மை மற்றும் போர்க்கருவிகள் உள்ளிட்டவைகளை பல கோடி செலவில் உருவாக்கினார்கள். பாகுபலியின் பிரம்மிக்கத்தக்க இந்த அரண்மனை செட்டுகள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், கலை இயக்குநர் சாபு சிரில் உருவாக்கினார்.
தற்போது, பாடகுபலியின் இரண்டு பாகங்களும் வெளியாகி 100 நாட்களை கடந்துவிட்டதால், படத்திற்காக அமைக்கப்பட்ட அரண்மனை செட்டுகள் மக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
ஐதராபாத்தின் சுற்றுளா தளமாக திகழும் கோல்கொண்டா கோட்டை, சார்மினார், உசைன் சாகர் ஏரி ஆகியவற்றுடன் தற்போது பாகுபலி அரண்மனைகளும் இணைந்துள்ளன. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் பாகுபலியின் அரண்மனை செட்டை பார்க்க வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.