Mar 28, 2022 03:32 PM

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தொடங்கியது

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தொடங்கியது

பாலா இயக்கத்தில் மூன்றாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்தில், அவர் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த  ஒரு ஹீரோவும் நடித்திராத வேடத்தில் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.

 

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மாயப்பாண்டி கலையை நிர்மாணிக்கிறார்.

 

18 ஆண்டுகளுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் பூஜையுடன் தொடங்கியது.

 

’சூர்யா 41’ என்ற தற்காலிக தலைப்போடு உருவாகும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனத்தின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தை ஜோதிகா தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

 

இப்படம் துவங்கியது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மீண்டும் பாலா சாரின் 'ஆக்க்ஷன்'  சப்தத்தை 18 ஆண்டுகளுக்கு பிறகு கேட்க துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசிகள்” என்று பதிவிட்டுள்ளார்.