மார்ச் 29 ஆம் தேதி ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ரிலீஸ்!
2015 ஆம் ஆண்டு வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ மலையாளப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சித்திக் இயக்கிய இப்படம் தற்போது தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா நடிக்க, வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி நடித்திருக்கிறார்.
அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
நகைச்சுவை, காதல், ஆக்ஷன் என்று அனைத்து விஷயங்களும் இருப்பதோடு இளைஞர்களை கவரும் ஒரு படமாக இருப்பதோடு, குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். அதனால் தான், ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரதன் பிலிம்ஸ் நிறுவனம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. ஹர்ஷினி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை வரும் மார்ச் 29 ஆம் தேதி பரதன் மூவிஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.