அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘பெட்டர் டுமாரோ’

பிரேமா பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் சைலேந்திர சுக்லா தயாரிக்கும் படம் ‘பெட்டர் டுமாரோ’. (Better Tomorrow) ’டூ ஓவர்’ படம் மூலம் சர்வதேச அளவில் 125 விருதுகள் பெற்ற இயக்குநர் ஷார்வி இயக்கும் இப்படம், அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
மிகக் கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் ஜனனியின் வாழ்க்கையையும், அவளை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் இப்படம் விவரிக்கிறது.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இளைஞர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஷார்வி, போதைப் பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு தைரியத்தை அளிக்கும் முயற்சியாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
மானவ், கௌரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன், பி.ஜீ.வெற்றிவேல், யுவா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷார்வி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பி.ஜீ.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குமாரசாமி இசையமைக்க, ஈஸ்வரமூர்த்தி படத்தொகுப்பு செய்துள்ளார். இணையத் தயாரிப்பை சரவணன் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.