மது போதையில் பெண்களுடன் குத்தாட்டம் போடும் பாரதிராஜா - வைரலாகும் வீடியோ!
இயக்குநர் பாரதிராஜா, தற்போது நடிகர் பாரதிராஜாவாக கலக்கி வருகிறார். ‘குரங்கு பொம்மை’ படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் வெளியான ‘படை வீரன்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்திருந்தார்.
மேலும், தனது பெயரில் திரைப்படக் கல்லூரி ஒன்றை தொடங்கியுள்ள பாரதிராஜா, அதில் இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு உள்ளிட்ட சினிமா சம்மந்தமான அனைத்து துறைகள் பற்றியும் சொல்லிக் கொடுத்து வருகிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இந்த சினிமா பயிற்சி மையத்தில் பல மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், பாரதிராஜா மது அருந்துவிட்டு பெண்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவர் டானஸ் ஆடும் அந்த நிகழ்வு, குடும்ப நிகழ்ச்சியா அல்லது பார்ட்டியா என்று சரியாக தெரியவில்லை என்றாலும், யாரோ அந்த நிகழ்வில் இருந்த ஒருவர் பாரதிராஜாவுக்கு தெரியாமல் அந்த வீடியோவை எடுத்ததோடு, அங்கே இருந்த மது பாட்டில்களை எடுத்துவிட்டு, பிறகு பாரதிராஜா டான்ஸ் ஆடுவதை எடுத்தது போல் உள்ளது.
கால் சட்டை மற்றும் டீ ஷர்ட் அணிந்துள்ள பாரதிராஜாவை பெண் ஒருவர் நடனம் ஆடுமாறு அழைக்க, சிறிது தயக்கம் காட்டும் அவர், பிறகு களத்தில் இறங்கி குத்து...குத்து...என்று குத்துகிறார். அவர் நடனம் ஆடும் இடத்தில், ஒரு டேபிளில் மது பாட்டிகள் உள்ளன.
அந்த வீடியோ இதோ,