Sep 03, 2017 04:24 PM

ஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ - தொடங்கிவைத்தார் பாரதிராஜா!

ஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ - தொடங்கிவைத்தார் பாரதிராஜா!

தமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்.. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது என்றும் கூட சொல்லலாம். 

 

இந்த விழா இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாக்யராஜா, சேரன், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், வேல்ராஜ், விஜய் மில்டன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

 

மேலும் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் Red Epic W Helium கேமராவும் சில லென்ஸ் உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து ஹாலிவுட்டில் படம் எடுக்க பயன்படுத்தும் அதிநவீன கேமரா மற்றும் தொழில் நுட்ப கருவிகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் எப்படி சிறப்பாக படம் எடுக்கலாம் என்பதற்கான கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

 

2007 முதல் கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் பயன்படுத்த லேட்டஸ்ட் டெக்னாலஜியில் ஸ்ரீ ஸ்டுடியோவின் பங்களிப்பு தவறாமல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சிறிய பட்ஜெட் படங்களாக உருவான கோலிசோடா, மூடர்கூடம் படங்களாகட்டும் தற்போது தயாராகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.O, காலா ஆகிய படங்களாகட்டும் ஸ்ரீ ஸ்டுடியோவின் லேட்டஸ்ட் டெக்னாலஜி இடம் பெற்றுள்ளது. 

 

ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனர் ஸ்ரீதர் சிங்கப்பூரில் பிலிம் டைரக்சன் படித்தவர்.. தற்போது ஹாலிவுட்டிலும் இவரது பணி தொடர்வதோடு அங்குள்ள திரைப்பட கல்லூரியில் லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி பாடம் எடுக்கும் கௌரவ விரிவுரையாளராகவும் இருக்கிறார்.  ஹாலிவுட் தரத்திலான தொழில்நுட்ப கருவிகளை தமிழ்சினிமாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் முதல் ஆளாக இருக்கிறது இவரது நிறுவனம்.    

 

படம் தயாரித்தலின் மூன்று நிலைகளான ப்ரீ புரடக்சன், புரடக்சன், போஸ்ட் புரடக்சன் என்கிற பணிகளிலும் ஸ்ரீ ஸ்டுடியோ உதவிகரமாக இருக்கிறது.   தற்போது ஒரு திரைப்படம் எடுக்க தயாராகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியும். டிஜிட்டலில் லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கும் குறைந்த செலவில் படம் தயாரிக்க விரும்புவர்களுக்கும் ஸ்ரீ ஸ்டுடியோ ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.