Feb 04, 2018 04:13 PM

படம் வெளியாவதற்கு முன்பாகவே அக்கப்போறை ஆரம்பித்த பிக் பாஸ் ஜூலி!

படம் வெளியாவதற்கு முன்பாகவே அக்கப்போறை ஆரம்பித்த பிக் பாஸ் ஜூலி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, அந்த பிரபலத்தை வைத்து பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவரை போராளியாக கொண்டாடிய மக்கள், டிவி நிகழ்ச்சியில் அவரது சுயரூபத்தை பார்த்து வெறுக்க தொடங்கியதோடு, அவர் கலந்துக்கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது.

 

இருந்தாலும், தனக்கு இருந்த எதிர்மறையான பிம்பத்தை வைத்தே, தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான ஜூலி, சில வெளிநாட்டு நிகழ்ச்சிகள், கடை திறப்பு என்று துட்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையே, விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மன்னர் வகையறா’ படத்தில் ஒரு சிறு காட்சியில் தலைக்காட்டியவர், தற்போது ‘உத்தமி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஜூலிக்கு மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர, தலைகால் புரியாமல் சந்தோஷமடைந்துள்ள ஜூலி, தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே மேனஜர் ஒருவரை வைத்துக்கொண்டாராம். அவருக்கு போன் செய்து, திரைப்படங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்து கேட்பவர்களிடம், தனது மேனஜரிடம் பேசுங்கள் என்று கூறுகிறாராம். அத்தோடு, இதுவரை அவர் பயன்படுத்தி வந்த போன் நம்பரையும் மேனஜரிடம் கொடுத்துவிட்டாராம்.