பிக் பாஸ் ஜூலிக்கு திருமணம்! - வைரலாகும் திருமண புகைப்படம் இதோ
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்தாலும், முதல் சீசனின் போட்டியாளர்கள் ரசிகர்களிடமும் இன்னமும் பிரபலமாகவே இருக்கிறார்கள். அந்த வகையில், முதல் சீசனில் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஜூலி, எது செய்தாலும் அதை பாராட்டுவதை காட்டிலும் விமர்சிப்பவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.
பிக் பாஸ் போட்டிக்கு பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஜூலி, சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்த திரைப்படங்கள் அத்தனையும் போஸ்டர் வெளியிட்டோடு நின்றுவிட்டது. படப்பிடிப்பு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இருப்பினும் ஜூலி அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட, அதற்கு பலர் விமர்சித்து கமெண்ட் வெளியிடுவதும் தொடர் கதையாக தொடர்ந்துக் கொண்டிருந்தது.
இதனால், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவதை ஜூலி நிறுத்திவிட்டார். தற்போதைய கொரோனா ஊரடங்கில் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாத ஜூலி, சமீபத்தில் திருமண அலங்காரத்தில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜூலியின் இந்த திருமண அலங்கார புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், ஜூலிக்கு திருமணமாகிவிட்டது, ஆனால், அவரது கணவர் யார்? என்று தெரியவில்லை, என்று தகவல் பரப்ப தொடங்கி விட்டார்கள். மேலும், ஜூலி அந்த புகைப்படத்தில் அழகாக இருப்பதாகவும் சில ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, எப்போதும் போல ஜூலியை விமர்சிப்பவர்கள், அந்த புகைப்படத்தை வைத்து திட்டி தீர்க்க, எதற்கும் பதில் அளிக்காத ஜூலி, எப்போதும் போல மவுனமாகவே இருக்கிறார்.
ஆனால், ஜூலிக்கு திருமணம் எல்லாம் நடக்கவில்லை, அவர் சாதாரணமாக எடுத்த புகைப்படம் தான் அது, என்ற தகவலும் வெளியாகியுள்ளது.