நிலவேம்பு விவகாரம் - கமல் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
நிலவேம்பு விவகாரத்தில், முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யலாம், என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தவறான செயல்களை செய்து வரும் கமலை உடனடியாக கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நீதிபதி முன்னால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலவேம்பு கசாயம் தொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன் கருத்தில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் நிலவேம்பு குறித்த முடிவுகளை பெறப்பட்டு அதனை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.