’மெர்சல்’லுக்கு போட்டியாக களம் இறங்கும் படங்கள் - முட்டுக்கட்டை போடும் டி.எஸ்.எல்!
’மெர்சல்’ படத்திற்கு எதிராக பல பிரச்சினைகள் இருந்தாலும், படம் அறிவித்தது போல தீபாவளியன்று வெளியாகும், என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே சமயம், படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், முடிந்தரை குறுகிய நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று இப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதற்காக, தமிழகம் முழுவதும் விநியோக முறையில் ‘மெர்சல்’ படத்தை வியாபராம் செய்து வரும் நிலையில், சென்னையில் விநியோக உரிமையை ரூ.10 கோடி டெபாசிட் கொடுத்து அபிராமி மெகாமால் சார்பில், அபிராமி ராமநாதன் பெற்றுள்ளாராம். சுமார் 22 கோடி ரூபாய் மொத்த வசூலானால் பத்து கோடி ரூபாய் அசல் கிடைக்குமாம்.
மேலும், தீபாவளி விடுமுறையையும், அதையடுத்து வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறைகளையில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் ‘மெர்சல்’ படத்தை மட்டுமே பார்த்தால் தான் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியும் என்பதால், ‘மெர்சல்’-களுக்கு போட்டியாக தீபாவளியன்று வெளியாகும் படங்களுக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் முட்டுக்கடை போடுவது, வேறூ எந்த படங்களும் வெளியாகதபடி சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறதாம்.